ADDED : மார் 25, 2024 12:34 PM

புதுடில்லி: பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மனைவியின் கார் டில்லியில் திருடுபோயுள்ளது.
பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் மனைவி மல்லிகா நட்டா. இவர் டில்லியின் கோவிந்த்புரி பகுதியில் உள்ள சர்வீஸ் சென்டரில் தனது காரை மார்ச் 19ம் தேதி சர்வீசுக்காக விட்டுள்ளார். பின்னர் காரின் டிரைவர் ஜோகிந்தர், அக்காரை எடுத்துச்சென்று தனது வீட்டின் வெளியே நிறுத்திவிட்டு இரவு உணவு சாப்பிட சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது அந்த காரை காணவில்லை. இதனையடுத்து தெற்கு டில்லி போலீஸ் ஸ்டேஷனில் புகாரளிக்கப்பட்டது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், 'சிசிடிவி.,யை ஆய்வு செய்ததில் திருடுப்போன கார், குருகிராம் நோக்கி சென்றது. அதன்பிறகு அந்த கார் எந்தப் பக்கமாக போனது என கண்டுபிடிக்க முடியவில்லை. டில்லி, ஹரியானா எல்லை பகுதியில் தேடும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
டில்லி புறநகர் பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறோம்' என்றனர். பா.ஜ., தலைவரின் மனைவியின் கார் திருட்டுபோனது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

