ADDED : ஆக 20, 2026 04:32 PM

புதுடில்லி: பல்வேறு சமூகத்தினர் இடையே புறக்கணிப்பு என்ற உணர்வை பாஜ ஏற்படுத்தி வருகிறது என்று காங்கிரஸ் எம்பி ராகுல் குற்றம்சாட்டி உள்ளார்.
டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் எம்பி ராகுல் பேசியதாவது: ஒவ்வொரு உயிரினமும், உண்மையை நோக்கி சொந்த பாதையை கொண்ட தனித்துவமான உயிரினங்கள் என்று மஹாத்மா காந்தி கூறியுள்ளார்.
உங்களின் உண்மை என்னவென்று என்னால் சொல்ல முடியாது. இதுதான் இன்றைய சித்தாந்த மோதலின் துல்லியாமான காரணம்.
உண்மையான போராட்டம் என்பது சிறிய குழுவினர் அனைத்து முடிவுகளையும் எடுக்கின்றனர். அவர்கள் ஒட்டு மொத்த அமைப்பையும் கட்டுப்படுத்துகின்றனர். ஆனால், அவர்களுக்கு நாட்டின் உண்மை என்ன என அனைத்தும் தெரியும். 150 கோடி மக்களின் உண்மை தெரிந்தும் ஆர்எஸ்எஸ் முடிவு செய்கிறது. அதுதான் எனது அந்த அமைப்புடன் உள்ள பிரச்னை.
இன்று நீங்கள் எதிர்கொண்டதை நான் எதிர்கொள்ளவில்லை. நீங்கள் பார்த்ததை நான் பார்க்கவில்லை. நீங்கள் கையாண்டதை நாங்கள் நான் கையாளவில்லை. அப்படி இருக்கையில் உங்களின் உண்மை என்ன என எப்படி என்னால் சொல்ல முடியும். பல்வேறு சமூகத்தினர் இடையே புறக்கணிப்பு உணர்வை பாஜவும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் ஏற்படுத்தி வருகின்றன. இவ்வாறு ராகுல் பேசினார்.
