sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஓட்டுகளை திருட பா.ஜ., - தேர்தல் கமிஷன் கூட்டு ஆதாரத்துடன் காங்., - எம்.பி., ராகுல் குற்றச்சாட்டு

/

ஓட்டுகளை திருட பா.ஜ., - தேர்தல் கமிஷன் கூட்டு ஆதாரத்துடன் காங்., - எம்.பி., ராகுல் குற்றச்சாட்டு

ஓட்டுகளை திருட பா.ஜ., - தேர்தல் கமிஷன் கூட்டு ஆதாரத்துடன் காங்., - எம்.பி., ராகுல் குற்றச்சாட்டு

ஓட்டுகளை திருட பா.ஜ., - தேர்தல் கமிஷன் கூட்டு ஆதாரத்துடன் காங்., - எம்.பி., ராகுல் குற்றச்சாட்டு

3


ADDED : ஆக 08, 2025 12:44 AM

Google News

ADDED : ஆக 08, 2025 12:44 AM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:''பா.ஜ.,வுடன் கூட்டு சேர்ந்து, தேர்தல் கமிஷன் ஓட்டு களை திருடுகிறது. இது, அரசியல் அமைப்புக்கு எதிரான குற்றம். இதில் நீதித் துறை தலையிட வேண்டும்,'' என, காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், சில புள்ளி விபர ஆதாரங்களுடன் குற்றஞ்சாட்டி உள்ளார்.

கடந்த 2024 லோக்சபா தேர்தலில் , மஹாராஷ்டிராவில் மொத்தமுள்ள 48 தொகுதிகளில், காங்., கூட்டணி 30ல் வென்றது; பா.ஜ., கூட் டணி 18ல் வென்றது.

படுதோல்வி ஆனால், அடுத்த ஐந்து மாதங்களுக்கு பின் நடந்த அம்மாநில சட்டசபை தேர்தலில், 288 தொ குதி களில், 232ஐ பா.ஜ., கூட்டணி கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்தது.

லோக்சபா தேர்தலில் அசத்திய காங்., கூட்டணி, சட்டசபை தேர்தலில், 50க்கும் குறைவான தொகுதிகளையே கைப்பற்றி, எதிர்க்கட்சி அந்தஸ்து கூட பெறவில்லை.

அப்போது முதலே, மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பா.ஜ., முறைகேடு செய்ததாக ராகுல் குற்றஞ்சாட்டி வருகிறார். இதை, தேர்தல் கமிஷனும் மறுத்து வருகிறது.

இந்நிலையில், டில்லியில் உள்ள காங்., தலைமை அலுவலகத்தில், நிருபர்களிடம் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் நேற்று கூறியதாவது:

ஆட் சிக்கு எதிரான மனநிலையால், பா.ஜ., ஒருபோதும் பாதிக்கப்படவில்லை. கருத்துக் கணிப்புகள் ஒன்று தெரிவிக்கின்றன. ஆனால், முடிவுகள் வேறு மாதிரியாக இருக்கின்றன. இதற்கு உதாரண ம், ஹரியானா, மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம்.

மஹாராஷ்டிராவை பொறுத்தவரை, லோக்சபா தேர்தலில் நாங்கள் அபார வெற்றி பெற்றோம். ஆனால், சட்டசபை தேர்தலில் படுதோல்வி அடைந்தோம்.

இதில், ஒரு கோடி புதிய வாக்காளர்கள் ஓட்டளித்துள்ளனர். மாலை 5:30 மணிக்கு பின், ஓட்டுச்சாவடிகளில் கூட்டம் அலைமோதியதாக தேர்தல் கமிஷன் கூறுகிறது. ஆனால் எங்களது முகவர்கள், இதை மறுக்கின்றனர்.

மஹாராஷ்டிராவில் முறைகேடு இருப்பதை கண்டறிந்தோம். எங்களது கேள்விகளுக்கு பதில் அளிப்பதை தேர்தல் கமிஷன் தவிர்க்கிறது. டிஜிட்டல் வாக்காளர் பட்டியல், ஓட்டுச்சாவடிகளில் பதிவான கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை நாங்கள் கேட்டு வருகிறோம்; இதுவரை தேர்தல் கமிஷன் அளிக்கவில்லை.

வெற்றி வாய்ப்பு தேர்தல் முடிவுகள் திட்டமிடப்படுகின்றன. இதற்கு, லோக்சபா தேர்தலில் கர்நாடகாவின் பெங்களூரு மத்திய தொகுதி முடிவுகளே சாட்சி. லோக்சபா தேர்தலுக்கு முன், காங்., நடத்திய கருத்துக் கணிப்பில், 16 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு இருப்பது தெரிய வந்தது. ஆனால், ஒன்பது இடங்களிலேயே காங்., வெற்றி பெற்றது. வெற்றி வாய்ப்புள்ள ஏழு தொகுதிகளில் நாங்கள் தோல்வி அடைந்தோம். இது குறித்து ஆய்வு மேற்கொண்டோம்.

குறிப்பாக, காங்., தோல்வி அடைந்த ஒரு லோக்சபா தொகுதியில் உள்ள ஒரு சட்டசபை தொகுதியை ஆய்வு செய்தோம். தேர்தல் கமிஷனின் தரவுகளே இந்த ஆய்வுக்கு பயன்படுத்தப்பட்டன.

பெங்களூரு மத்திய லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட மகாதேவபுரா சட்டசபை தொகுதியில் நாங்கள் ஆய்வு செய்தோம்.

இத்தொகுதியில் காங்., 1,15,586 ஓட்டுகளை பெற்றது; பா.ஜ., 2,29,632 ஓட்டுகளை பெற்றது. இந்த தொகுதிக்கு உட்ப ட்ட அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் காங்., வெற்றி பெற்றது. ஆனால், மகாதேவபுரா சட்டசபை தொகுதியில் மட்டும் தோல்வி அடைந்தது.

ஆய்வில் , மகாதேவபுரா சட்டசபை தொகுதியில், 1,00,250 ஓட்டுகள் திருடப்பட்டதை கண்டறிந்தோம். அதாவது, அனைவரும் போலி வாக்காளர்கள்.

சீர்குலைக்கும் முயற்சி இதில், 11,965 வாக்காளர்களின் பெயர், இரு முறை பதிவாகி உள்ளது. 40,009 வாக்காளர்களின் முகவரிகள் போலி. 10,452 வாக்காளர்கள் ஒரு குறிப்பிட்ட முகவரியில் மொத்தமாக பதிவு செய்துள்ளனர்.

அதோடு, 4,132 பொருத்தமில்லாத புகைப்படங்கள் உள்ளன. புதிய வாக்காளர்களை பதிவு செய்வதற்கான, 'படிவம் - 6' ஆவணத்தை 33,692 பேர் தவறாக பயன்படுத்தி உள்ளனர்.

திட்டமிட்ட ரீதியில் தேர்தல் முடிவுகளை சீர்குலைக்கும் முயற்சி இது என்பது தற்போது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.

பல பதிவுகளில், 'வீட்டு எண் 0' என குறிப்பிடப்பட்டு உள்ளது. ஒற்றை படுக்கை அறைக்கு கொண்ட முகவரியில், 46 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளனர்.

அந்த இடத்தை பார்வையிட்டபோது, அங்கு யாருமே வசிக்கவில்லை. கர்நாடகாவில் ஒரே நபர், பல பூத்களில் ஓட்டு போட்டுள் ளார். இப்படி பலர் ஓட்டு போட்டுள்ளனர்.

ஒரு தொகுதியிலே இவ்வளவு முறைகேடு நடந்ததுள்ளது. இந்த ஆய்வை செய்து முடிக்க எங்களுக்கு ஆறு மாதங்கள் ஆனது. டிஜிட்டல் வாக்காளர் பட்டியலை தேர்தல் கமிஷன் வழங்கினால், 30 நிமிடங்களில் இந்த ஆய்வை முடித்து விட முடியும்.

தேர்தலில் முறைகேடு செய்ய, பா.ஜ.,வுக்கு தேர்தல் கமிஷன் உதவுகிறது. அக்கட்சி உடன் சேர்ந்து ஓட்டுகளை திருடுகிறது. இது அரசியலமைப்புக்கு எதிரான குற்றம். இதில் நீதிமன்றம் தலையிட வேண்டும்.

இவ்வாறு அவர் குற்றஞ்சாட்டினார்.

ராகுலுக்கு புதிதல்ல!

தேர்தல் கமிஷனின் நற்பெயரை கெடுக்க காங்., முயற்சிக்கிறது. நீதித் துறையை விமர்சித்த காங்., தலைவர்கள் சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தையும் விமர்சித்தனர்; தற்போது தேர்தல் கமிஷனையும் குற்றஞ்சாட்டுகின்றனர். எந்தெந்த அமைப்புகள் காங்கிரசை கண்டிக்கிறதோ, அவற்றின் மீது அவதுாறு பரப்புவதே காங்கிரசின் நோக்கம். பொய்யான தகவல்களை ராகுல் கூறியிருக்கிறார். அவருக்கு இது ஒன்றும் புதிதல்ல. கிரண் ரிஜிஜு, மத்திய அமைச்சர், பா.ஜ.,



குற்றச்சாட்டுகள் என்ன?

வாக்காளர் பட்டியலில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் ஒரே வாக்காளர் பல மாநிலங்களில் ஒரே வாக்காளர் முகவரி இல்லை அல்லது வீட்டு எண் 0 என குறிப்பிடப்பட்டுள்ளது ஒரே முகவரியில் பல வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் பொருத்தமில்லாத புகைப்படங்கள் முதன்முறை வாக்காளர்களுக்கான படிவம் - 6 தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது.



சத்திய பிரமாணம் செய்ய முடியுமா?

ராகுலுக்கு தேர்தல் கமிஷன் அனுப்பிய கடிதம்: வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்ததாக நீங்கள் கூறுகிறீர்கள். இது குறித்து நடவடிக்கை எடுக்க, இக்கடிதத்துடன் இணைக்கப்பட்டுள்ள பிரகடனம் அல்லது சத்தி ய பிரமாணத்தில் கையொப்பமிட்டு கர்நாடக தலைமை தேர்தல் கமிஷனரிடம் மாலைக்குள் சமர்ப்பிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். குற்றச்சாட்டில் உறுதியுடன் இல்லை எனில் இனியாவது பொய் சொல்லி மக்களை திசை திருப்புவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.








      Dinamalar
      Follow us