காங்., அரசை கண்டித்து போராட பா.ஜ.,வில் குழுக்கள் அமைப்பு
காங்., அரசை கண்டித்து போராட பா.ஜ.,வில் குழுக்கள் அமைப்பு
ADDED : டிச 31, 2024 05:22 AM
பெங்களூரு: பல்லாரி மாவட்ட அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்களில், குழந்தை பெற்ற பின் சிலர் உயிரிழந்தனர். அதே சமயம், சில அரசு அதிகாரிகள் தற்கொலை செய்து வந்தனர்.
இப்பிரச்னைகளை கண்டித்து, 'போராட்டக்குழு, உண்மை கண்டறியும் குழு' என இரண்டு குழுக்கள் மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா தலைமையில் அமைக்கப்பட்டு உள்ளன.
போராட்டக்குழு: நாராயணசுவாமி, அரக ஞானேந்திரா, மகேஷ், அஸ்வத் நாராயணா, பசவராஜா மத்திமாட், ரவிகுமார், நவீன், ராஜு கவுடா, பாரதிஷெட்டி, ஹேமலதா நாயக், ராஜ்குமார் பாட்டீல் தெளூர், சந்து பாட்டீல், லலிதா அன்னப்பூர், பாஸ்கர் ராவ், வெங்கடேஷ் தோதாரி, வசந்தகுமார், கருணாகர் கசாலே, இசையமைப்பாளர் ஜெகதீஷ் ஹிரேமணி.
உண்மை கண்டறியும் குழு: டாக்டர் ஷைலேந்திர பெல்டேல், டாக்டர் அவினாஷ், டாக்டர் பசவராஜ கெளகர், டாக்டர் லக் ஷ்மி அஸ்வின் கவுடா, டாக்டர் நாராயண், டாக்டர் அருணா, விஜயலட்சுமி கெரூர், டாக்டர் பத்மபிரகாஷ், டாக்டர் விஜயலட்சுமி, பா.சுதா ஹல்காய், ரத்தன் ரமேஷ் பூஜாரி, பிரதீப் கடாதி. இசையமைப்பாளர்கள் சி.மஞ்சுளா, கே.எம்.அசோக் கவுடா.
அரசு அதிகாரிகள் தற்கொலை செய்த வழக்கில் போலீசாரின் போக்கு, தற்கொலை செய்ததற்கான காரணங்களை உண்மை கண்டறியும் குழுவினர் சேகரிப்பர்.
இந்த தகவல்களை போராட்ட குழுவினர், மக்களின் முன் வெளிச்சம் போட்டு காட்டுவர்.
போராட்டக் குழுவினர், அதிகாரிகள் தற்கொலை செய்த ஊர்களுக்கு சென்று ஜனவரியில் போராட்டம் நடத்த திட்டமிட்டு உள்ளனர். சூழ்நிலையை பொருத்து தேதி, நேரம் அறிவிக்கப்படும். இதன் மூலம், கர்நாடக அரசியலில் பெரிய மாற்றங்கள் நிகழும் என பா.ஜ., தரப்பில் கூறப்படுகிறது.