நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சண்டிகர்:ஹரியானா மாநிலத்தில், 2014, 2019 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளில் நடந்த சட்டசபைத் தேர்தலில் பா.ஜ., வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.
கடந்த 2014 மற்றும் 2019ல் மனோகர்லால் கட்டார் முதல்வர் பதவி வகித்தார். கடந்த ஆண்டு அக்., 17ல், நயாப் சிங் சைனி முதல்வராக பதவியேற்றார்.
மூன்றாவது முறை ஆட்சி அமைத்து ஓராண்டு நிறைவடைவதை முன்னிட்டு, பானிபட்டில் 17ம் தேதி நடக்கும் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை துவக்கி வைப்பார் என்று அறிவிக்கப்பட்டு, அதற்கான ஏற்பாடுகளும் நடந்தன.
இந்நிலையில், ஐ.ஜி., புரான் குமார் தற்கொலை விவகாரம் மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, பா.ஜ., அரசின் விழா ரத்து செய்யப் பட்டுள்ளது.