ADDED : மே 30, 2024 11:29 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பா.ஜ.,வின் தலைவர் ஒருவர் புரி ஜெகன்நாதர், பிரதமர் மோடியின் பக்தர் என்று கூறியுள்ளார். இதன் வாயிலாக பா.ஜ., ஒடிசாவின் ஒவ்வொரு தனிநபரையும் அவமானப்படுத்தி உள்ளது.
ராகுல், லோக்சபா எம்.பி., - காங்கிரஸ்
மன்னிப்பு கேளுங்கள் ராகுல்!
மஹாத்மா காந்தி, சுதந்திரத்திற்கு பின் காங்கிரஸ் கட்சியை கலைத்துவிடச் சொன்னார். ராகுலுக்கு முந்தைய தலைமுறை காந்தியின் பேச்சை கேட்கவில்லை. அதற்காக ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும். நேரு குடும்பம் கட்சியில்இருந்து வெளியேற வேண்டும்.
மோகன் யாதவ், ம.பி., முதல்வர், பா.ஜ.,
நடிக்க போய்விடுவார்!
கங்கனா ரணாவத்துக்கு ஹிமாச்சலின் பிரச்னைகள் குறித்த புரிதலோ, அதற்கான திட்டமோ கிடையாது. அப்படியே திட்டம் இருந்தாலும், அவர் மக்களுக்காக அலுவலகங்களில் ஏறி இறங்குவாரா? படம் நடிக்க மும்பை சென்று விடுவார்.
விக்ரமாதித்யா சிங்,ஹிமாச்சல் அமைச்சர், காங்கிரஸ்