துணை முதல்வர் முன்னிலையில் போலீசுக்கு ‛பளார்' விட்ட பா.ஜ., எம்.எல்.ஏ,,
துணை முதல்வர் முன்னிலையில் போலீசுக்கு ‛பளார்' விட்ட பா.ஜ., எம்.எல்.ஏ,,
ADDED : ஜன 05, 2024 11:00 PM

புனே: மஹாராஷ்டிராவில் துணை முதல்வர் பங்கேற்ற நிகழ்ச்சியில் தனக்கு அவமதிப்பு ஏற்பட்ட ஆத்திரத்தில் சீருடை அணியாத போலீஸ் கான்டஸ்பிள் கன்னத்தில் பா.ஜ., எம்.எல்.ஏ, அறைந்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மஹாராஷ்டிராவில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூட்டணி அரசில் தேசிய வாத காங், கட்சியின் அஜித்பவார் துணை முதல்வராக உள்ளார். புனேயில் அரசு விழா ஒன்றில் அஜித் பவார் பங்கேற்றார். தொகுதி எம்.எல்.ஏ. என்ற முறையில் பா.ஜ., எம்.எல்.ஏ. சுனில் காம்ப்ளே என்பவரும் கலந்து கொண்டார்.
அப்போது விழா மேடையில் தொகுதி எம்.எல்.ஏ., என்ற முறையில் தன்னை பேச அழைக்கவில்லை மேலும் விழா அழைப்பிதழில் தன் பெயரும் இடம் பெறவில்லை என தெரிய வந்தது. இதனால் கடுப்பாகி போன சுனில் காம்ப்ளே விழாவை புறக்கணித்து பாதியிலேயே வெளியேறினார்.
கடுங்கோபத்துடன் விழா மேடை படிக்கட்டிலிருந்து கீழே இறங்கும் போது பின்னால் வந்தவர்கள் உரசியதால் தடுமாறினார். அப்போது அருகில் பாதுகாப்பு நின்றிருந்த சீருடை அணியாத போலீஸ் கான்ஸ்டபிள் கன்னத்தில் இடது கையால் ஓங்கி அறைந்தார். இதன் வீடியோ காட்சி சமூகவலைதளங்களில் வைரலானது.