பஞ்சாபில் தனித்து போட்டியிட பா.ஜ., திட்டம்: ஓட்டு சதவீதம் இரட்டிப்பானதால் நம்பிக்கை
பஞ்சாபில் தனித்து போட்டியிட பா.ஜ., திட்டம்: ஓட்டு சதவீதம் இரட்டிப்பானதால் நம்பிக்கை
ADDED : அக் 19, 2025 12:17 AM

பஞ்சாபில், 2027ல் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிட பா.ஜ., திட்டமிட்டுள்ளது. அங்கு அக்கட்சிக்கு இரண்டு எம்.எல்.ஏ.,க்களே உள்ள நிலையில், 2024 லோக்சபா தேர்தலில், ஓட்டு சதவீதம் 9.6ல் இருந்து, 18.5 சதவீதமாக அதிகரித்ததால் இந்த முடிவுக்கு கட்சி மேலிடம் வந்துள்ளதாக கூறப்படுகிறது. பஞ்சாபில் முதல்வர் பகவந்த் மான் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. மொத்தம் 117 எம்.எல்.ஏ.,க்கள் உடைய அம்மாநில சட்டசபையில், பா.ஜ.,வுக்கு வெறும் இரண்டு எம்.எல்.ஏ.,க்கள் மட்டுமே உள்ளனர்.
வட மாநிலங்களில் மோடி அலை வெற்றி பெற்றாலும், பஞ்சாபில் அது எடுபடவில்லை.
வரும் 2027 சட்டசபை தேர்தலில், இந்த நிலை மாறுமா என்பதை தற்போது சொல்ல முடியாது என்றாலும், மாநிலத்தில் கட்சி கட்டமைப்பை வலுப்படுத்தும் பணியை பா.ஜ., துவங்கியுள்ளது.
விவசாய நலத்திட்டம் க டந்த 2024 லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வின் ஓட்டு சதவீதம் பெரியளவில் உயர்ந்துள்ளது. 2019 லோக்சபா தேர்தலில், 9.63 சதவீதமாக இருந்த ஓட்டு சதவீதம், 2024 லோக்சபா தேர்தலில், 18.5 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இதனால், 2027 சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிட பா.ஜ. , திட்டமிட்டுள்ளது.
விவசாயிகள், சீக்கிய சமூகத்தினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினரை ஈர்க்க பா.ஜ., முயற்சித்து வருகிறது. பிரதமர் மோடி அறிவித்துள்ள விவசாய நலத்திட்டங்களை மாநிலம் முழுதும் எடுத்துச் செல்லும் பணியிலும் அக்கட்சி ஈடுபட்டுள்ளது.
பெரும்பான்மையாக உள்ள சீக்கிய சமூகத்தினரை கவரு ம் வேலைகளிலும் பா.ஜ., ஈடுபட்டுள்ளது. தற்போது, பஞ்சாப் பா.ஜ.,வில், 13 சீக்கிய மாவட்ட தலைவர்கள் உள்ளனர்.
கிராமப்புறங்களில் புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது. தொடர் கூட்டங்கள், மக்கள் சந்திப்புகள் நடத்தப்படுகின் றன.
பா.ஜ., - சிரோமணி அகாலி தளம் கூட்டணி ஒரு காலத்தில் ஆதிக்கம் செலுத்தியது. கிராமப்புறங்களில், சீக்கிய விவசாயிகளிடையே சிரோமணி அகாலி தளம் வலுவாக இருந்தது; பா.ஜ., நகரங்களில் உள்ள ஹிந்துக்கள் மத்தியில் தாக்கம் செலுத்தியது.
ஆனால், 2021ல் கொண்டு வந்த வேளாண் சட்டங்களை கண்டித்து, அகாலி தளம் கூட்டணியை முறித்தது. இது பா.ஜ.,வுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியது.
இந்நி லையில், அடிமட்ட அளவில் கட்சி கட்டமைப்பை பா.ஜ., வலுப் படுத்தி வருகிறது. கடந்த மே மாதத்தில், 'உங்கள் வாசலில் பா.ஜ., தொண்டர்கள்' என்ற ஆறு மாத கிராமப்புற பிரசாரத்தை அக்கட்சி துவங்கியது. இதற்கு ஆம் ஆத்மி அ ரசு எதிர்ப்பு தெரிவித்தது.
நினைவாலயம் பஞ்சாபில் பா.ஜ.,வின் செல்வாக்கு அதிகரித்ததற்கு ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி முக்கிய பங்கு வகிக்கிறார். தேசி ய அளவில் பிற்படுத்தப்பட்டோரின் முகமாக செயல்படும் அவர் அடிக்கடி பஞ்சாப் வருகிறார்.
ஹரியானா அரசு குருஷேத்திராவில் சீக்கிய மியூசிய ம் மற்றும் குரு ரவிதாஸ் நினைவாலயம் அமைக்க திட்டமிட்டுள்ளது. மேலும், குரு தேக் பகதுாரின், 350வது நினைவு நாளை நவம்பரில் மாநிலம் முழுதும் சிறப்பாக கொண்டாட உள்ளது.
சீக்கிய மக்கள் பாகிஸ்தானில் உள்ள குருத்வாராவுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த அனுமதி மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சீக்கியர்களின் ஓட்டுகளை கவர பா.ஜ., முயற்சிக்கிறது.
கடந்த 1980களில் காலிஸ்தான் இயக்கம் இந்தியாவில் தீவிரமாக இருந்தது. அந்த இயக்கத்தில் இருந்தவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என பலர் கைது செய்யப்பட்டனர்.
அதில் சிலர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளனர். அவர்களை விடுவிக்கும் முயற்சியிலும் மாநில பா.ஜ., ஈடுபடுகிறது.
வரும் மாதங்களில் பஞ்சாப் அரசியல் சூழல் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆம் ஆத்மி, பா.ஜ., மற்றும் காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளும் தற்போதே தேர்தல் சண்டைக்கு தயாராகி விட்டன.
நமது சிறப்பு நிருபர் -: