/
செய்திகள்
/
இந்தியா
/
'உருவாக்க தெரிந்த எங்களுக்கு... தெரியும்!': பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பாக்.,கிற்கு கடும் எச்சரிக்கை; ஒவ்வொரு அங்குலத்தையும் குறிவைக்க பிரமோஸ் ஏவுகணையால் முடியும்

UPDATED : அக் 19, 2025 12:12 AM
ADDED : அக் 18, 2025 11:56 PM

லக்னோ:''பயங்கரவாதத்துக்கு எதிரான 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கை வெறும் 'டிரெய்லர்' மட்டுமே. பாகிஸ்தானின் ஒவ்வொரு அங்குல நிலமும், பிரம்மோஸ் ஏவுகணையின் எல்லைக்குள் உள்ளது. அந்நாட்டை உருவாக்க தெரிந்த எங்களால்... என்ன செய்ய முடியும் என்பதை நீங்களே புரிந்து கொள்வீர்கள்,'' என்று குறிப்பிட்ட ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், 'பாகிஸ்தானை உருவாக்கிய இந்தியாவுக்கு, அழிக்க எவ்வளவு நேரமாகும்?' என மறைமுகமாக எச்சரிக்கை விடுத்தார்.
உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநில தலைநகர் லக்னோவில், 'பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ்' நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
தப்பிக்க முடியாது
இந்நிறுவனம் உள்நாட்டிலேயே தயாரித்த முதல் தொகுதி பிரம்மோஸ் ஏவுகணைகளை, முதல்வர் யோகி ஆதித்யநாத் உடன் இணைந்து, பா.ஜ., மூத்த தலைவரும், ராணுவ அமைச்சருமான ராஜ்நாத் சிங் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது:
வெற்றி என்பது நமக்கு சம்பவம் அல்ல; அது ஒரு பழக்கமாகி விட்டது என்பதை ஆப்பரேஷன் சிந்துார் நிரூபித்துள்ளது.
பாகிஸ்தானின் ஒவ்வொரு அங்குல நிலமும், பிரம்மோஸ் ஏவுகணையின் இலக்கை எட்டக்கூடிய துாரத்தில் உள்ளது. இனி, அந்நாடு பிரம்மோஸ் ஏவுகணையிடம் இருந்து தப்பிக்க முடியாது.
பயங்கரவாதத்துக்கு எதிரான ஆப்பரேஷன் சிந்துார் வெறும் டிரெய்லர் மட்டுமே. அந்த டிரெய்லரே, நாம் யார் என்பதை பாகிஸ்தானுக்கு உணர்த்தி விட்டது. அந்நாட்டை உருவாக்க தெரிந்த எங்களால்... என்ன செய்ய முடியும் என்பதை நீங்களே புரிந்து கொள்வீர்கள். நம் முப்படைகளின் முழு பலமும் வெளிப்பட்டால் என்ன நடக்கும் என்பதை, நான் சொல்ல விரும்பவில்லை.
முதுகெலும்பு
ஆப்பரேஷன் சிந்துார் மூலம் பிரம்மோஸ் ஏவுகணையின் செயல்முறை நிரூபிக்கப்பட்டு உள்ளது. பிரம்மோஸ் ஏவுகணை என்பது ஓர் ஆயுத அமைப்பு மட்டுமல்ல; நாட்டின் வளர்ந்து வரும் உள்நாட்டு திறன்களின் சின்னம்.
வேகம், துல்லியம், சக்தி போன்றவற்றின் கலவையே பிரம்மோஸ் ஏவுகணை. இது, உலகின் சிறந்த அமைப்புகளில் ஒன்று. ராணுவம், கடற்படை, விமானப் படையின் முதுகெலும்பாக பிரம்மோஸ் ஏவுகணை மாறியுள்ளது.
உற்பத்தி மையம்
ராணுவ உற்பத்தி மையமாக லக்னோ உருவெடுத்துள்ளது. இது, உ.பி., ராணுவ வழித்தடத்தின் ஆறு மையங்களில் ஒன்று.
சில ஆண்டுகளுக்கு முன், நாட்டின் மிக நவீன ஏவுகணைகள் லக்னோவில் இருந்து தயாரிக்கப்படும் என்று, யாராவது கற்பனை செய்திருக்க முடியுமா? ஆனால் இன்று, அந்த கனவு நனவாகி உள்ளது.
உதிரி பாகங்களுக்காக வெளிநாடுகளை நம் நாடு இனி சார்ந்திருக்கக் கூடாது. இதற்காக சிறு தொழில்களை வலுப் படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.