தேவகவுடா குடும்பத்தினருக்கு எதிராக போட்டியிடுவதாக பா.ஜ., பிரமுகர் சவால்
தேவகவுடா குடும்பத்தினருக்கு எதிராக போட்டியிடுவதாக பா.ஜ., பிரமுகர் சவால்
ADDED : மார் 05, 2024 07:19 AM
ஹாசன்: ''லோக்சபா தேர்தலில், நான் முன்னாள் பிரதமர் தேவகவுடா குடும்பத்துக்கு எதிராக போட்டியிடுவேன்,'' என, பா.ஜ., பிரமுகர் தேவராஜே கவுடா சவால் விடுத்தார்.
லோக்சபா தேர்தலுக்கு, பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி வைத்துள்ளன. ஆனாலும் இரண்டு கட்சிகளின் தொண்டர்களுக்கு இடையே, இன்னும் ஒருங்கிணைப்பு ஏற்படவில்லை. இது இரண்டு கட்சிகளின் மேலிடங்களுக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.
இவர்களுக்குள் ஒற்றுமையை ஏற்படுத்தும் முயற்சியில் மேலிடத் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
ஹாசனிலும் கூட்டணிக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. கட்சி நிர்வாகிகளும் பகிரங்கமாகவே அதிருப்தித் தெரிவித்துள்ளனர். ஹாசனில் பா.ஜ., வேட்பாளரை களமிறக்க வேண்டும் என, நெருக்கடி கொடுக்கின்றனர்.
இதற்கிடையில் ஹாசன் பா.ஜ., பிரமுகர் தேவராஜேகவுடா கூறியதாவது:
லோக்சபா தேர்தலில், ஹாசன் தொகுதியில் தேவகவுடா குடும்பத்தினருக்கு எதிராக, நான் களமிறங்க முடிவு செய்துள்ளேன்.
தொகுதி எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணாவை, ஆறு ஆண்டுகள் தகுதி நீக்கம் செய்து, கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அவர் மேல் முறையீடு செய்து, பதவியில் நீடிக்கிறார்.
தற்போது தேர்தலுக்கு தயாராகிறார். மாவட்ட சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ஹாசனில் தன்னையே வேட்பாளராக கூறியுள்ளார்.
தேவகவுடாவும் ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். இது பா.ஜ.,வின் நேர்மையான தொண்டர்களை திசை திருப்பும் முயற்சியாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.

