'ஆப்பரேஷன் சிந்துார்' விவகாரம்: ராகுலுக்கு பா.ஜ., கேள்வி
'ஆப்பரேஷன் சிந்துார்' விவகாரம்: ராகுலுக்கு பா.ஜ., கேள்வி
UPDATED : ஆக 11, 2025 12:21 PM
ADDED : ஆக 11, 2025 02:19 AM

புதுடில்லி : 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கையின் போது மத்திய அரசு முழு சுதந்திரம் அளித்ததாக நம் விமானப்படை தளபதி அமர் பிரீத் சிங் தெரிவித்த நிலையில், நம் படைகளின் கைகள் கட்டப்பட்டதாகக் குற்றஞ்சாட்டிய காங்கிரஸ் எம்.பி., ராகுலை பா.ஜ., தலைவர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் ஏப்., 22ல் நடத்திய கோழைத்தனமான தாக்குதலில், 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதற்கு பதிலடியாக, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை, 'ஆப்பரேஷன் சிந்துார்' என்ற பெயரில் நம் படைகள் மே 7ல் தகர்த்தன.
இந்தியா - பாக்., இடையே நான்கு நாட்களாக நீடித்த மோதல், பாகிஸ்தான் கெஞ்சியதை அடுத்து முடிவுக்கு வந்தது.
'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கையின் போது நம் படைகளின் கைகள் கட்டப்பட்டு விட்டன. சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கவில்லை' என, காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், லோக்சபாவில் சமீபத்தில் குற்றஞ்சாட்டினார்.
கர்நாடகாவின் பெங்களூரில் நேற்று முன்தினம் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய நம் விமானப்படை தளபதி அமர் பிரீத் சிங், 'ஆப்பரேஷன் சிந்துார் வெற்றிக்கு மத்திய அரசின் முழு சுதந்திரமே காரணம்.
'எங்களுக்கு எந்த கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. பாகிஸ்தானின் ஆறு போர் விமானங்களை நாங்கள் சுட்டு வீழ்த்தினோம்' என்றார்.
இந்நிலையில், பா.ஜ., தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் அமித் மாள்வியா நேற்று கூறியுள்ளதாவது:
'ஆப்பரேஷன் சிந்துார்' தொடர்பாக நம் விமானப்படை தளபதி அமர் பிரீத் சிங் தெளிவாக விளக்கம் அளித்து விட்டார். எனினும், காங்கிரசும், பாகிஸ்தான் ஊடகங்களும் மவுனம் சாதிக்கின்றன. தற்போது ராகுல் என்ன சொல்லப் போகிறார்?
பார்லி.,யிலேயே அவர் தன்னை முழுமையாக முட்டாளாக்கிக் கொண்டார். இதே போல், தேர்தல் முறைகேடு தொடர்பாக தேர்தல் கமிஷன் மீது அபத்தமான குற்றச்சாட்டுகளை ராகுல் சுமத்தி உள்ளார்.
அவை உண்மை எனில் சத்திய பிரமாணத்தில் அவர் கையெழுத்திடலாமே. அவரது குற்றச்சாட்டுகளை அவரே நம்பவில்லை எனில் வேறு யார் நம்புவர்? இவ்வாறு அவர் கூறினார்.
நற்பெயரை கெடுக்கிறார்!
@@
பார்லி.,யின் நற்பெயரை ராகுல் கெடுக்கிறார்; எப்போதும் பொய் மட்டுமே பேசி வருகிறார். இதற்கு முன், பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களை பார்த்திருக் கிறேன். ஆனால், ராகுல் போல யாரையும் பார்த்ததில்லை; பார்க்கவும் விரும்பவில்லை. - கிரண் ரிஜிஜு மத்திய அமைச்சர், பா.ஜ.,
பார்லி.,யின் நற்பெயரை ராகுல் கெடுக்கிறார்; எப்போதும் பொய் மட்டுமே பேசி வருகிறார். இதற்கு முன், பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களை பார்த்திருக் கிறேன். ஆனால், ராகுல் போல யாரையும் பார்த்ததில்லை; பார்க்கவும் விரும்பவில்லை. - கிரண் ரிஜிஜு மத்திய அமைச்சர், பா.ஜ.,