ADDED : செப் 27, 2024 08:17 PM
புதுடில்லி:மாநகராட்சி நிலைக்குழு உறுப்பினர் பதவிக்கான தேர்தலில், பா.ஜ., கவுன்சிலர் வெற்றி பெற்றார்.
டில்லி மாநகராட்சியில் நிலைக்குழு உறுப்பினராக இருந்த பா.ஜ., கவுன்சிலர் கமல்ஜித் செராவத், சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இதையடுத்து, கவுன்சிலர் மற்றும் நிலைக்குழு உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில், நிலைக்குழு உறுப்பினர் பதவிக்கு நேற்று தேர்தல் நடந்தது.
ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சி கவுன்சிலர்கள் இந்தத் தேர்தலைப் புறக்கணித்தனர். இதனால் பா.ஜ., கவுன்சிலர் சுந்தர் சிங் தன் கட்சி கவுன்சிலர்களின் 115 ஓட்டுக்களையும் பெற்றார்.
தேர்தலை புறக்கணித்ததால் ஆம் ஆத்மி கட்சியின் நிர்மலா குமாரிக்கு ஒரு ஓட்டு கூட பதிவாகவில்லை. இதையடுத்து, சுந்தர் சிங் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.