ADDED : ஆக 23, 2024 03:26 AM

ஐதராபாத்: லோக்சபா தேர்தலின் போது பா.ஜ.,குறித்து அவதூறாக பிரசாரம் செய்ததாக தெலுங்கான காங்., முதல்வர் ரேவந்த் ரெட்டி மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளது பா.ஜ.,
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் போது கடந்த மே மாதம் கொத்தகூடம் மாவட்டத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பேசிய ரேவந்த் ரெட்டி, மத்தியில் மீண்டும் பா.ஜ., ஆட்சி அமைந்தால் அரசியல்சாசனம் மாற்றப்படும், இட ஒதுக்கீடு சலுகை பறிபோகும் என பிரசாரம் செய்தார்.
இது குறித்து தெலுங்கான பா.ஜ., மாநில பொதுச்செயலர் காஸம் வெங்கடேஷ்வரலு , முதல்வகுப்பு சிறப்பு கோர்ட்டில் , ரேவந்த் ரெட்டி பொய்யான தகவலை தேர்தலில் பிரசாரமாக பயன்படுத்தியதாக அவதூறு வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி ரேவந்த் ரெட்டிக்கு சம்மன் அனுப்பி செப். 25-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டார்.

