1.5 கோடி வாக்காளர்களை நீக்க விரும்பும் பாஜ: மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு
1.5 கோடி வாக்காளர்களை நீக்க விரும்பும் பாஜ: மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு
ADDED : டிச 22, 2025 06:09 PM

கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் ஒன்றரை கோடி வாக்காளர்களை நீக்க பாஜ விரும்புகிறது என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டி உள்ளார்.
கோல்கட்டாவில் திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் பூத் முகவர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் கட்சி தலைவரும், முதல்வருமான மம்தா பானர்ஜி உரையாற்றினார். அப்போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக அங்குள்ள மைக்ரோபோன்கள் இயங்கவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த மம்தா, போலீசார் ஏன் இதை கவனிக்காமல் உள்ளனர் என்று கடிந்து கொண்டார்.
தொடர்ந்து அவர் பேசியதாவது;
இங்கு ஒன்றரை கோடி வாக்காளர்களின் பெயர்களை நீக்க பாஜ விரும்புகிறது. அவர்கள் ஜனநாயகத்தை அழிக்க விரும்புகிறார்கள்.
நேற்று பர்த்வானில் பீஹார் மாநில பதிவு எண்களைக் கொண்ட 50 பைக்குகள் டெலிவரி செய்யப்படுவதைக் கண்டேன். தேர்தலுக்காக வெளியில் இருந்து மக்களை இங்கு அழைத்து வர முயற்சிக்கிறார்கள்.
அனைத்து பூத் முகவர்களும் எஸ்ஐஆர் தொடர்பாக எம்எல்ஏக்கள், கவுன்சிலர்கள் மற்றும் தொகுதித் தலைவர்களிடம் ஆலோசனை கேட்க வேண்டும்.
இவ்வாறு மம்தா பானர்ஜி பேசினார்.

