ADDED : மார் 19, 2024 11:03 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூரு : பெங்களூரில் நேற்று முன்தினம் நடந்த ம.ஜ.த., முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில், கூட்டணி கட்சியான பா.ஜ., தங்களை மதிக்கவில்லை என குமாரசாமி அதிருப்தி தெரிவித்தார்.
இந்நிலையில், காங்., கட்சியை சேர்ந்தவரும், சுகாதார துறை அமைச்சருமான தினேஷ் குண்டுராவ் பெங்களூரில் நேற்று அளித்த பேட்டி:
தொகுதி பங்கீடு மூலம் ம.ஜ.த.,வை அரசியல் ரீதியாக முடிக்க பா.ஜ., நினைக்கிறது. பா.ஜ.,வின் கைப்பிடியில் ம.ஜ.த., சிக்கிக் கொண்டது. அதில் இருந்து வெளியே வருவது சிரமம்.
டில்லிக்கு மட்டுமே அழைக்கப்படும் குமாரசாமிக்கு, பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற ஷிவமொகா கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கவில்லை. இப்போதும் காலம் கடக்கவில்லை; குமாரசாமி தன் தவறை உணர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

