கவுன்ட்டவுன் துவங்கிவிட்டது; அனைத்து தேர்தலிலும் தோல்வி தான்: மணிஷ் சிசோடியா சாடல்
கவுன்ட்டவுன் துவங்கிவிட்டது; அனைத்து தேர்தலிலும் தோல்வி தான்: மணிஷ் சிசோடியா சாடல்
ADDED : செப் 01, 2024 09:06 AM

புதுடில்லி: 'பா.ஜ.,வின் கவுன்ட்டவுன் துவங்கிவிட்டது. அனைத்து மாநில தேர்தல்களிலும் தோல்வி அடையும்' என மணிஷ் சிசோடியா தெரிவித்தார்.
ஹரியானா மாநில சட்டசபை தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையம் மாற்றி அறிவித்தது. அதன்படி, அங்கு அக்டோபர் 1ம் தேதிக்கு பதில் அக்டோபர் 5ம் தேதி ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. அக்டோபர் 8ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும். ஹரியானாவில் அனைத்து தொகுதிகளிலும் சுயேச்சையாக ஆம்ஆத்மி போட்டியிடுகிறது.
இந்நிலையில், அக்கட்சியின் மூத்த தலைவரும், டில்லி முன்னாள் துணை முதல்வருமான மணிஷ் சிசோடியா பேசியதாவது: பா.ஜ.,வின் கவுன்ட்டவுன் துவங்கிவிட்டது. தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து தேர்தல்களிலும் தோல்வி அடையும். மக்கள் தங்களை நிராகரித்து வருகின்றனர் என்பதை லோக்சபா தேர்தல் முடிவுகள் மூலம் பா.ஜ., தெரிந்து கொண்டது.
தோல்வி உறுதி!
வரும் நாட்களில் ஹரியானா, மஹாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மற்றும் புதுடில்லி தேர்தல்களில் பா.ஜ., தோல்வி அடைவது உறுதி. தேர்தல் தேதிகளை மாற்றுவதன் மூலம் வெற்றி பெற முடியாது.நாடு முழுவதும் உள்ள கட்சித் தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் ஹரியானாவில் பிரசாரம் செய்வார்கள். இவ்வாறு அவர் கூறினார்.