sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

காங்., மூத்த தலைவருக்கு பா.ஜ., பகிரங்க அழைப்பு

/

காங்., மூத்த தலைவருக்கு பா.ஜ., பகிரங்க அழைப்பு

காங்., மூத்த தலைவருக்கு பா.ஜ., பகிரங்க அழைப்பு

காங்., மூத்த தலைவருக்கு பா.ஜ., பகிரங்க அழைப்பு

1


ADDED : செப் 22, 2024 03:48 AM

Google News

ADDED : செப் 22, 2024 03:48 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சண்டிகர்:பா.ஜ.,வுக்கு வருமாறு காங்கிரஸ் எம்.பி., குமாரி செல்ஜாவுக்கு, மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார் அழைப்பு விடுத்துள்ளார்.

அண்டை மாநிலமான ஹரியானா சட்டசபைத் தேர்தல் அக்டோபர் 5ம் தேதி நடக்கிறது. ஆளும் பா.ஜ., பிரதான எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளிடையே மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.

தேர்தல் பிரசாரம் களைகட்டியுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், சிர்சா லோக்சபா தொகுதி எம்.பி.,யுமான குமாரி செல்ஜா, 61, பிரசாரத்தில் ஈடுபடாமல் ஒதுங்கி இருக்கிறார்.

இந்நிலையில், பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சருமான மனோகர் லால் கட்டார் நேற்று கூறியதாவது:

ஹரியானா சட்டசபை தேர்தல் களைகட்டியுள்ள நேரத்தில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஹரியானாவின் சிர்சா லோக்சபா தொகுதி எம்.பி.,யுமான குமாரி செல்ஜா, தேர்தல் பணிகளில் இருந்து ஒதுங்கி வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கிறார். அவர் தன் மக்கள் பணியைத் தொடர பா.ஜ.,வுக்கு வர வேண்டும்.

ஹரியானா மாநில காங்கிரசில் உட்கட்சிப் பூசல் தலைவிரித்து ஆடுகிறது. அக்கட்சி முதல்வர் வேட்பாளர் குறித்து எந்த முடிவையும் எடுக்க முடியாமல் திணறிக் கொண்டு இருக்கிறது. காங்கிரஸ் தலைவர் பூபிந்தர் சிங் ஹூடா மற்றும் அவரது மகண் தீபேந்தர் சிங் ஹூடா ஆகியோருக்கு இடையே பூசல் நிலவுகிறது.

அதனால்தான் தலித் சமூகத்தைச் சேர்ந்த எங்கள் சகோதரி மக்கள் பணியில் இருந்து ஒதுங்கி வீட்டில் முடங்கிக் கிடக்கிறார். அவர் தன் மக்கள் பணியைத் தொடர பா.ஜ.,வுக்கு வந்தால் பதவி தர தயாராக இருக்கிறோம். குமாரி செல்ஜாவை மனப்பூர்வமாக வரவேற்க பா.ஜ., தயாராக இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

குமாரி செல்ஜா பா.ஜ.,வுக்கு வருவாரா என்ற கேள்விக்கு பதில் அளித்த கட்டார், “இது சாத்தியங்கள் நிறைந்த உலகம். சரியான நேரம் வரும்போது எல்லாம் சாத்தியமாகும்,” என்றார்.

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் சமீபத்தில், “ஹரியானா காங்கிரஸில் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை. என் நல்ல தோழி குமாரி செல்ஜா, காங்கிரஸ் தலைவர் பூபிந்தர் சிங் ஹூடாவுக்கு எதிராக ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

''அதேபோல செல்ஜாவுக்கு எதிராக ஹூடாவும் எதுவும் பேசவில்லை. எங்கள் கட்சி ஒன்றுபட்டுதான் இயங்குகிறது. இந்த தேர்தலில் நாங்கள் ஒற்றுமையாக போராடுவோம்,”என, கூறியிருந்தார்.






      Dinamalar
      Follow us