தாசில்தார் ஜீப்பில் 30 கி,மீ, இழுத்துச் செல்லப்பட்ட வாலிபர் உடல்
தாசில்தார் ஜீப்பில் 30 கி,மீ, இழுத்துச் செல்லப்பட்ட வாலிபர் உடல்
ADDED : டிச 21, 2024 10:45 PM
பஹ்ரைச்:தாசில்தாரின் ஜீப், பைக் மீது மோதியதில் ஜீப்பில் சிக்கிய வாலிபர் உடல் 30 கி.மீ., தூரம் இழுத்துச் செல்லப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் பயாக்பூரைச் சேர்ந்த நரேந்திர குமார் ஹல்தார்,35, நேற்று முன் தினம் மாலை நன்பரா நன்பரா- - பஹ்ரைச் சாலையில் பைக்கில் சென்றார். அப்போது, நன்பரா தாசில்தார் சைலேஷ் குமார் அவஸ்தி, பஹ்ரைச்சில் இருந்து நன்பரா தாலுகா அலுவலகத்துக்கு அரசு ஜீப்பில் சென்றார்.
பைக் மீது தாசில்தாரின் ஜீப் மோதியது. நரேந்திர குமார் ஜீப்பின் அடிப்பாகத்தில் சிக்கினார். ஆனால், அதை அறியாத ஜீப் டிரைவர் மெராஜ் அஹமது வண்டியை வேகமாக ஓட்டிச் சென்றார்.
நன்பரா தாலுகா அலுவலகம் சென்றபின் ஜீப்பின் அடியில் ஒரு இளைஞர் உடல் சிக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த போலீசார், உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். நரேந்திர குமார் உடல் 30 கி.மீ., தூரம் இழுத்து வரப்பட்டது முதற்கட்ட விசாரணையில் தெரிந்தது.
பஹ்ரைச் கலெக்டர் மோனிகா ராணி உத்தரவுப்படி டிரைவர் மெராஜ் அகமது கைது செய்யப்பட்டார். தாசில்தா சைலேஷ் குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.