ADDED : அக் 25, 2025 05:29 PM

மும்பை: ஹிந்தி படமான 'ஹம் ஆப்கே ஹைன் கோன்' புகழ் மூத்த நகைச்சுவை நடிகர் சதீஷ் ஷா 74, இன்று மரணமடைந்தார்.
பல ஹிந்தி படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் சதிஷ் ஷா. இவர் சிறுநீரகம் தொடர்பான பிரச்னைகளால் அவதிப்பட்டு வந்தார். சமீபத்தில் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி மும்பையில் உள்ள இந்துஜா மருத்துவமனையில் இன்று காலமானார். இறுதி சடங்கு நாளை( அக்டோபர் 26) நடைபெறும் என்று அவருடைய மேலாளர் தெரிவித்துள்ளார்.
மறைந்த சதீஷ் ஷா, 'ஹம் சாத்-சாத் ஹைன்', 'மைன் ஹூன் நா', 'கல் ஹோ நா ஹோ', 'கபி ஹான் கபி நா', 'தில்வாலே 'துல்ஹானியா லே ஜாயேங்கே' மற்றும் 'ஓம் சாந்தி ஓம்', 'ஹம் ஆப்கே ஹைன் கோன்' போன்ற பிரபலமான வெற்றிப் படங்கள் அவரது திரைப்பட பங்களிப்பில் முக்கியமானவை.
தனது 40 ஆண்டுகால திரைப்பயணத்தில் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி இரண்டிலும் தனது மறக்கமுடியாத பாத்திரங்கள் மூலம் சதீஷ் ஷா, ஒவ்வொரு வீடுகளிலும் புகழடைந்தார்.1983 ஆம் ஆண்டு வெளியான 'ஜானே பி தோ யாரோ' என்ற நையாண்டித் தொடரில், பல கதாபாத்திரங்களில் நடித்து மக்களிடம் வரவேற்பை பெற்றார். அவரது மறைவுக்கு பாலிவுட் நடிகர்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

