ADDED : ஜூலை 09, 2025 02:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஹைதராபாதில் உயர் நீதிமன்ற வளாகத்துக்கு அருகே, சிட்டி சிவில் நீதிமன்றம் உள்ளது.
இதன் தலைமை நீதிபதி சசிதர் ரெட்டிக்கு, மின்னஞ்சல் வாயிலாக நேற்று காலை ஒரு கடிதம் வந்தது. அதில், நீதிமன்றத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறப்பட்டிருந்தது.
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நீதிபதிகள், வழக்கறிஞர்கள் உட்பட அனைவரையும் நீதிமன்றத்திலிருந்து வெளியேற்றினர்.
வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் வந்து நீதிமன்ற வளாகம் முழுக்க சோதனையிட்டனர். அதில் சந்தேகப்படும்படியான பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை.
இந்த பரபரப்பால், நீதிமன்ற செயல்பாடுகள் நேற்று நாள் முழுதும் ரத்து செய்யப்பட்டன.