வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு; அசம்பாவிதம் தவிர்ப்பு
வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு; அசம்பாவிதம் தவிர்ப்பு
ADDED : ஏப் 15, 2025 04:40 AM
பிஜாப்பூர்: சத்தீஸ்கரில், நக்சல்கள் புதைத்து வைத்திருந்த சக்திவாய்ந்த ஐந்து வெடிகுண்டுகளை, பாதுகாப்புப் படையினர் கண்டுபிடித்து, செயலிழக்க செய்தனர்.
சத்தீஸ்கரில் நக்சல் ஆதிக்கம் மிகுந்த பிஜாப்பூர் மாவட்டத்தின் மான்கேலி பகுதியில் ஆயுதப்படையினருடன், உள்ளூர் போலீசார் நேற்று ரோந்து சென்றனர்.
அப்போது, சாலையில் சில பொருட்கள் புதைக்கப்பட்டிருப்பதை கண்டறிந்தனர். அவற்றை சோதனையிட்டபோது, ஐந்து சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, வெடிகுண்டு செயலிழப்பு குழுவின் உதவியுடன், பாதுகாப்புப் படையினர் அவற்றை செயலிழக்க செய்தனர். பாதுகாப்பு படையினர் செல்லும் வாகனத்தை குறிவைத்து தாக்குதல் நடத்துவதற்காக, நக்சல் அமைப்பினர் இந்த வெடிகுண்டுகளை புதைத்து வைத்திருப்பது தெரியவந்தது. இதை கண்டறிந்து, செயலிழக்க செய்ததன் வாயிலாக, பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.