ADDED : ஏப் 06, 2025 12:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஜம்மு: ஜம்மு - காஷ்மீரின் ஆர்.எஸ்., புரா செக்டாரில் இந்தியா - பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் நேற்று அதிகாலை மர்ம நபர் நடமாட்டம் இருப்பதாக இந்திய எல்லை பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அந்த பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, பாக்., பகுதியில் இருந்து காஷ்மீர் எல்லைக்குள் ஊடுருவிய ஒரு நபரை, நம் படையினர் எச்சரித்தனர்.
அதை பொருட்படுத்தாமல், அவர், நம் எல்லைக்குள் முன்னேறினார். இதையடுத்து, பாதுகாப்புப் படையினர் அவர் மீது தாக்குதல் நடத்தினர். இதில் அவர் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரைப் பற்றிய தகவல்களை பாதுகாப்புப் படையினர் சேகரித்து வருகின்றனர்.