ADDED : ஜன 22, 2024 06:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விடுமுறை கிடையாது: சித்தராமையா கைவிரிப்பு
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை ஒட்டி, இன்று அரசு விடுமுறை அறிவிக்கும்படி மாநில அரசுக்கு பா.ஜ.,வினர் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
இது குறித்து, துமகூரில் முதல்வர் சித்தராமையா நேற்று கூறியதாவது:
ராமர் கோவில் கும்பாபிஷேகத்துக்காக அரசு விடுமுறை அறிவிக்கப்படவில்லை.
கர்நாடக ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில், அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன.
பெங்களூரு மஹாதேவபுரா சட்டசபை தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள ராமர் கோவிலை நான் திறந்து வைக்கிறேன். கும்பாபிஷேக நிகழ்ச்சியை நேரலையில் பார்க்க தடை விதிக்கப்படாது. அனைத்து பகுதிகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படி, போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.