ADDED : அக் 15, 2024 05:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தங்கவயல்: நீச்சல் குளத்தில் விளையாடிக்கொண்டிருந்த போது, மூச்சு திணறல் ஏற்பட்டதால் 7 வயது சிறுவன் பலியானார்.
தங்கவயல் புறநகர் பகுதியான பாரண்ட ஹள்ளியை அடுத்த களிகல்லு கிராமத்தில், சுற்றுலா பயணியரை ஈர்க்கும் வகையில், 'வாட்டர் பார்க்' அமைத்து உள்ளனர். இதில் விளையாட குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலர் வருகின்றனர்.
நேற்று முன்தினம் பெங்களூரை சேர்ந்த இம்ரான் குடும்பத்தினர், வாட்டர் பார்க்குக்கு வந்தனர். இங்குள்ள நீச்சல் குளத்தில் விளையாடிக்கொண்டிருந்த போது, இம்ரான் மகன் பாபுவுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது.
இதனால் அவர்கள், மகனை பெங்களூரு அம்பேத்கர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பரிசோதித்த டாக்டர், சிறுவன் உயிரிழந்ததாக அறிவித்தார். வாட்டர் பார்க் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

