ADDED : நவ 06, 2024 07:38 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முஸ்தாபாபாத்: வடகிழக்கு டில்லியில் நேற்று முன்தினம் மாலை 16 வயது சிறுவன் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டான்.
வடகிழக்கு டில்லியின் முஸ்தாபாபாத் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் செவ்வாய்க்கிழமை இரவு 8:30 மணி அளவில் சரமாரியாக கத்தியால் குத்தப்பட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், படுகாயமடைந்த சிறுவனை மீட்டு, மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், அவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
தயாள்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்விரோதம் காரணமாக சிறுவன் கொலை செய்யப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.