ADDED : ஜன 15, 2024 12:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
லோக்சபா தேர்தலில், பா.ஜ., தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அக்கட்சியை அதன் கூட்டணி கட்சிகள் ஆதரிக்கும் என சொல்ல முடியாது. அக்கட்சிகள் எங்களுக்கு கூட ஆதரவு தெரிவிக்கலாம்.
சசி தரூர், எம்.பி., - காங்.,
சொந்தமாக கட்சியை துவங்குங்க!
உறவினருக்கு சொந்தமான கட்சியை, அஜித் பவார் திருடுகிறார். வேறொருவரின் கட்சியை, ஏக்நாத் ஷிண்டே திருடுகிறார். இவர்கள் இருவரும் சொந்தமாக கட்சியை துவங்கி, மற்றவர்களை அழைத்துச் செல்ல தைரியம் வேண்டும்.
சஞ்சய் ராவத், ராஜ்யசபா எம்.பி., சிவசேனா - உத்தவ் பிரிவு
பா.ஜ.,வுக்கு 450 தொகுதிகள்!
வரும் லோக்சபா தேர்தலில் மொத்தமுள்ள, 543 தொகுதிகளில், 450 தொகுதிகளை ஆளும் பா.ஜ., கைப்பற்றி, தொடர்ந்து மூன்றாவது முறையாக மத்தியில் ஆட்சி அமைக்கும். நரேந்திர மோடி மீண்டும் பிரதமராவது உறுதி.
மாணிக் சாஹா, திரிபுரா முதல்வர், பா.ஜ.,