பிரஜ்வல் ரேவண்ணா ஆபாச வீடியோ வழக்கு: பா.ஜ., பிரமுகர் கைது
பிரஜ்வல் ரேவண்ணா ஆபாச வீடியோ வழக்கு: பா.ஜ., பிரமுகர் கைது
ADDED : மே 11, 2024 02:01 AM

பெங்களூரு: கர்நாடகா ம.ஜ.த.,வைச் சேர்ந்த பிரஜ்வல் ரேவண்ணா மீதான ஆபாச வீடியோ வழக்கு தொடர்பாக பா.ஜ,வைச் சேர்ந்த தேவராஜ் கவுடாவை நேற்று போலீசர் கைதுசெய்தனர்.
கர்நாடகா மாநிலம் ஹாசன் எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணா, 33. சில பெண்களுடன் ஆபாசமாக இருக்கும், வீடியோக்கள், புகைப்படங்கள் வெளியானது பற்றி, சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்கிறது. பிரஜ்வல் இப்போது ஜெர்மனியில் உள்ளார்.
இந்நிலையில் வேலைக்கார பெண்ணை கடத்தியதாக, பிரஜ்வல் தந்தை ரேவண்ணா மீது, மைசூரு கே.ஆர்.நகர் போலீசில் புகார் அளிக்கப்பட்டு இருந்தது. இந்த வழக்கில் ரேவண்ணா, அவரது உறவினர் சதீஷ் பாபு, , ஆகியோரும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இந்த சூழ்நிலையில் இந்த வழக்கில் நேற்று திடீர் திருப்பமாக பா.ஜ., பிரமுகரும் வழக்கறிஞருமான தேவராஜ் கவுடாவை ஹரியூர் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.