தடையை மீறி : சம்பல் பகுதிக்கு ராகுல், பிரியங்கா இன்று வருகை
தடையை மீறி : சம்பல் பகுதிக்கு ராகுல், பிரியங்கா இன்று வருகை
ADDED : டிச 04, 2024 02:31 AM

சம்பல்; உத்தரப்பிரதேச மாநிலம் சம்பல் பகுதிக்கு ராகுல்,பிரியங்கா வர தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உத்தரப்பிரதேசம் சம்பல் நகரில் உள்ள மசூதியில் கோர்ட் உத்தரவின் பேரில், தொல்லியல்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்த சென்றனர். இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மசூதியில் ஏராளமானோர் திரண்டனர். இதனால் பதற்றம் அதிகரித்து, மோதல் வன்முறையாக வெடித்தது. இச்சம்பவங்களில் 5 பேர் பலியாயினர் 30 போலீசார் காயம் அடைந்தனர்.
தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவியதால் 24 மணிநேரமும் போலீசார் கட்டுப்பாட்டின் கீழ் சம்பல் நகரம் கொண்டு வரப்பட்டது. சம்பல் விவகாரம் சுப்ரீம்கோர்ட்டில் விசாரணையில் உள்ளது.
இந்நிலையில் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், வயநாடு லோக்சபா எம்.பி. பிரியங்கா ஆகியோர் கலவரம் பாதித்த சம்பல் பகுதிக்கு இன்று (டிச.04) வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு சம்பல் மாவட்டம் நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இங்கு வெளியாட்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் ராகுல், பிரியங்கா ஆகியோருக்கு அனுமதி இல்லை எனவே சம்பல் பகுதிக்கு வரவேண்டாம் என அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.