மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் 23 வகையான நாய்களை வளர்க்க தடை
மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் 23 வகையான நாய்களை வளர்க்க தடை
ADDED : மார் 15, 2024 06:53 AM

புதுடில்லி: மனித உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் மூர்க்கத்தனமான, 23 வகை நாய்களை வளர்க்க தடை விதித்துள்ள மத்திய அரசு, இது தொடர்பான உத்தரவை, அனைத்து மாநில அரசுகளுக்கும் அனுப்பியுள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் நாய்கள் கடித்து, உயிரிழப்போர் சம்பவம் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.
குறிப்பாக வெளிநாட்டு இன நாய்கள் மிகவும் ஆக்ரோஷமாக இருப்பதால், இது போன்ற சம்பவங்கள் நடப்பதாக தகவல்கள் வெளியாகின.
ஆலோசனை
இது தொடர்பாக விலங்கு நல ஆர்வலர்கள், நிபுணர்களுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்தியது.
அவர்கள் அளித்த பரிந்துரையைத் தொடர்ந்து வெளிநாட்டு ரகம் உட்பட மிகவும் மூர்க்கதனமாக உள்ள, 23 வகை நாய்களை வளர்க்க மத்திய அரசு தடை விதித்துள்ளது.
இது தொடர்பான உத்தரவை, அனைத்து மாநில அரசுகளுக்கும், மத்திய அரசு நேற்று அனுப்பியது. அதில் கூறப்படுவதாவது:
வளர்ப்பு நாய்கள் தாக்குதலால் மக்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. இதனால், மிகவும் மூர்க்கத்தனமாக செயல்படும் 23 வகை நாய்களை வளர்க்க தடை விதிக்கப் பட்டுள்ளது.
இனப்பெருக்கம்
ஏற்கனவே வளர்க்கப்படும் இந்த வகை நாய்களின் இனப்பெருக்கம் நடைபெறாமல் இருக்க, அவற்றுக்கு கருத்தடை செய்ய வேண்டும். தடை செய்யப்பட்ட நாய் வகைகளை விற்பனை செய்வதற்கும், இனப்பெருக்கம் செய்வதற்கும் உரிமம் வழங்கக் கூடாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
1.பிட்புல் டெரியர்
2.டோசா இனு
3.அமெரிக்கன்
ஸ்டாபோர்ட்ஷையர் டெரியர்
4.பிலா பிரேசிலிரோ
5.டோகோ அர்ஜென்டினோ
6.அமெரிக்கன் புல்டாக்
7.போர்போயல்
8.கங்கல்
9.மத்திய ஆசிய ஷெப்பர்ட்
10.காகசியன் ஷெப்பர்ட்
11.தென் ரஷ்ய ஷெப்பர்ட்
12.டோர்ன்ஜாக்
13.ஜப்பானிய டோசா
மற்றும் அகிதா
14.மாஸ்டிப்ஸ்
15.ராட்வீலர்
16.டெரியர்ஸ்
17.ரோடீசியன் ரிட்ஜ்பேக்
18.ஓநாய் நாய்கள்
19.கனாரியோ
20.அக்பாஷ்
21.மாஸ்கோ காவலர்
22.கேன் கோர்சோ
23.பேண்டாக்

