ADDED : அக் 27, 2024 10:59 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மைசூரு: சகோதரர்களுக்கு இடையே 200 ரூபாய்க்காக ஏற்பட்ட தகராறு, தற்கொலையில் முடிந்தது.
மைசூரு, நஞ்சன்கூடின் அஹல்யா கிராமத்தில் வசிப்பவர் நிங்கண்ணா, 30. இவரது தம்பி சித்தராஜு, 26. நேற்று காலை மின் கட்டணம் செலுத்திவிட்டு, வீட்டுக்கு வந்தார். தன் அண்ணன் நிங்கண்ணாவிடம், “மின் கட்டணம் கட்டியுள்ளேன். 200 ரூபாய் கொடு,” என, கேட்டார்.
இதனால் கோபமடைந்த அவர், “என்னிடமே பணம் கேட்கிறாயா?” என, திட்டியதுடன் அடிக்கவும் செய்தார்.
இதனால் மனம் நொந்த சித்தராஜு, துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
ஜெயபுரா போலீசார், நிங்கண்ணாவிடம் விசாரிக்கின்றனர்.

