ADDED : செப் 22, 2024 11:28 PM

கலபுரகி: அண்ணன் காதலித்த பெண்ணின் குடும்பத்தினரால், தம்பி கொலை செய்யப்பட்டார்.
கலபுரகி ரூரல் நாகனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சச்சின், 23. இவரது தம்பி சுமித் மல்லாபாத், 19. மும்பையில் கல்லுாரியில் படித்தார்.
சச்சினும், நாகனஹள்ளி கிராமத்தின் இளம்பெண் ஒருவரும் காதலித்தனர். காதலுக்கு பெண்ணின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
காதலை கைவிடும்படி பலமுறை சச்சினை எச்சரித்தனர். ஆனால் அவர் கேட்கவில்லை.
இந்நிலையில் திருவிழாவில் பங்கேற்ற சுமித், சொந்த ஊருக்கு வந்து இருந்தார்.
நேற்று முன்தினம் இரவு சுமித்தும், அவரது தாயும் வீட்டில் இருந்தனர்.
அப்போது வீட்டிற்குள் புகுந்த, சச்சினின் காதலி குடும்பத்தினர், சுமித், அவரது தாயிடம் தகராறு செய்தனர். கத்தியால் சுமித்தை குத்திவிட்டு தப்பினர்.
உயிருக்கு போராடியவர் கலபுரகி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலன் அளிக்காமல், நேற்று காலை இறந்தார். பல்கலைக்கழக போலீசார் விசாரிக்கின்றனர்.