ADDED : மே 16, 2025 07:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலக்காடு : கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், பூளகாடு பகுதியை சேர்ந்த ஜாபர்நசீப் - ரீனா தம்பதியின் மகன்கள் முகமது நிஹால், 20, முகமது ஆதில், 16, மற்றும் முகமது ஷாஸ். நேற்று முன்தினம் மாலை, முகமது நிஹால், முகமது ஆதில் ஆகிய இருவரும் மலம்புழா அணையை சுற்றி பார்க்க சென்றனர்.
அணையின் கிழக்கு பகுதியிலுள்ள நீர்ப்பிடிப்பு பகுதியில் மூழ்கி இறந்தனர்.
தீயணைப்பு படையினர் அணையில் தேடிய போது, இருவரின் உடல்கள் மீட்கப்பட்டன. மலம்புழா போலீசார் விசாரிக்கின்றனர்.