பயங்கரவாதிகளை மேற்குவங்கத்திற்குள் நுழைய பிஎஸ்எப் அனுமதிக்கிறது; மம்தா பகீர் குற்றச்சாட்டு
பயங்கரவாதிகளை மேற்குவங்கத்திற்குள் நுழைய பிஎஸ்எப் அனுமதிக்கிறது; மம்தா பகீர் குற்றச்சாட்டு
ADDED : ஜன 02, 2025 02:45 PM

கோல்கட்டா: பயங்கரவாதிகளை மேற்குவங்கத்திற்குள் நுழைய பி.எஸ்.எப்., அனுமதித்தது என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டி உள்ளார்.
இது குறித்து அவர் நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது: மேற்கு வங்க தேச எல்லையை பாதுகாக்கும், பி. எஸ். எப்., படையினர் மாநிலத்தை சீர்குலைக்கும் முயற்சியில் பல்வேறு பகுதிகளில் இருந்து பயங்கரவாதிகளை அனுமதிக்கின்றனர்.
பயங்கரவாதிகள் பெண்களை சித்திரவதை செய்ய முயற்சி செய்கின்றனர். எல்லை எங்கள் கையில் இல்லை, எனவே திரிணமுல் காங்கிரஸ் அரசு ஊடுருவலை அனுமதிப்பதாக யாராவது குற்றம் சாட்டினால், அது பிஎஸ்எப்-ன் பொறுப்பு என்பதை நான் சுட்டிக்காட்டுவேன். இதற்கு திரிணமுல் காங்கிரஸை குறை கூற வேண்டாம்.
நீங்கள் என்ன செய்தாலும் அதை ஏற்றுக்கொள்வோம் என்று மத்திய அரசிடம் பலமுறை கூறி வருகிறேன். பயங்கரவாதிகளுக்கு யாராவது உதவுவதை நான் கண்டால், நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
வங்கதேசத்தில் இருந்து ஊடுருவல் மேற்கு வங்க மாநில அமைதியைக் சீர்குலைப்பதாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறிய சில வாரங்களுக்குப் பிறகு, மம்தா பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார்.