ADDED : பிப் 22, 2024 07:13 AM

பெங்களூரு: பி.யு.சி., இரண்டாம் ஆண்டு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, இலவச பஸ் வசதியை பி.எம்.டி.சி., செய்துள்ளது.
இதுகுறித்து, பி.எம்.டி.சி., வெளியிட்ட அறிக்கை:
பி.யு.சி., இரண்டாம் ஆண்டு தேர்வு, மார்ச் 1ம் தேதி துவங்குகிறது. மார்ச் 22 வரை தேர்வு நடக்கும். மாணவ, மாணவியரின் வசதிக்காக, பி.எம்.டி.சி., இலவச பஸ் இயக்க முடிவு செய்துள்ளது.
வால்வோ பஸ்களை தவிர, மற்ற பஸ்களில் மாணவ, மாணவியர் இலவசமாக பயணம் செய்யலாம். தங்களின் ஹால் டிக்கெட்டை காண்பித்து, தேர்வு மையம் வரை இலவசமாக பயணம் செய்யலாம்.
தேர்வு மையங்களின் முன், பஸ்களை நிறுத்தும்படி ஓட்டுனர், நடத்துனருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்வு நடக்கும் நாட்களில், கூடுதல் பஸ்கள் இயக்கவும் பி.எம்.டி.சி., ஆலோசிக்கிறது. பஸ்களின் இலவச சேவையை மாணவ, மாணவியர் பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.