ADDED : ஜன 05, 2025 10:56 PM
பெங்களூரு: பெங்களூரு மாநகராட்சி, 2025 - 26ம் ஆண்டின் பட்ஜெட் தாக்கலுக்கு தயாராகிறது. இது தொடர்பாக, மக்களின் ஆலோசனைகளை வரவேற்றுள்ளது.
இது தொடர்பாக, பெங்களூரு மாநகராட்சி நிதிப்பிரிவு சிறப்பு கமிஷனர் ஹரிஷ் குமார் கூறியதாவது: பெங்களூரு மாநகராட்சி, 2025 - 26ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கலுக்கு, தயாராகி வருகிறது. பொதுமக்கள் தங்களின் கருத்து, ஆலோசனைகளை தெரிவிக்கலாம். பட்ஜெட் வரைவு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
பொது மக்கள் மட்டுமின்றி, சங்கங்கள், அமைப்புகள், மக்கள் நல சங்கங்களும் கருத்து, ஆலோசனைகளை கூறலாம். இதற்கு பிப்ரவரி 10ம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி மத்திய அலுவலகத்தின் நுழைவு வாசல் அருகில், பெட்டி வைக்கப்பட்டுள்ளது. இதில் தங்களின் கருத்துகளை எழுதி போடலாம்.
bbmpbudget@gmail.com என்ற இ - மெயில் மூலமாகவும், ஆலோசனைகளை பிப்ரவரி 10ம் தேதிக்குள் அனுப்பலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.