மஹாராஷ்டிராவில் பள்ளத்தில் பஸ் கவிழ்ந்தது: 4 பேர் பரிதாப பலி
மஹாராஷ்டிராவில் பள்ளத்தில் பஸ் கவிழ்ந்தது: 4 பேர் பரிதாப பலி
ADDED : செப் 23, 2024 01:01 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மும்பை: மஹாராஷ்டிராவில் பள்ளத்தில் பஸ் கவிழ்ந்த விபத்தில், 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மஹாராஷ்டிரா, அமராவதி அருகே 50 பேர் சென்று கொண்டிருந்த பஸ் 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர், உள்ளூர் மக்கள் உதவியுடன் மீட்பு பணி மேற்கொண்டனர்.
இதில் 4 பேர் உயிரிழந்தனர். வளைவில் திரும்பும் போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது என போலீசார் விசாரணையில் தெரியவந்தது.