ADDED : நவ 29, 2024 12:08 AM

கங்காவதி; சுற்றுலா சென்று திரும்பிய அரசு பஸ் வயலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 60 மாணவர்கள் உயிர் தப்பினர்.
கலபுரகி மாவட்டம், குர்மித்கல்லில் உள்ள பள்ளியில், 60 மாணவர்கள், அரசு பஸ்சில் சுற்றுலா சென்றனர். நேற்று முன்தினம் ஹம்பியில் உள்ள பல இடங்களை பார்த்தனர்.
அனைத்தையும் பார்த்த பின், இரவில் ஊருக்கு புறப்பட்டனர்.
நேற்று அதிகாலை 4:30 மணியளவில், கங்காவதி அருகே பஸ் வந்து கொண்டிருந்தது.
எதிர்திசையில் வந்த வாகனத்தின் மீது மோதாமல் இருப்பதற்காக, சுற்றுலா பஸ் டிரைவர் சதாசிவய்யா, பஸ்சை லேசாக திருப்பி உள்ளார்.
எதிர்பாராத விதமாக, பஸ் வயலில் கவிழ்ந்தது. அதிர்ஷ்டவசமாக ஒருவரை தவிர, மற்றவர்கள் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.
டிரைவரின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது என போலீசார் தெரிவித்தனர்.
மாணவர்கள் அனைவரும், மாற்று அரசு பஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

