ADDED : பிப் 21, 2025 09:58 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஷாதரா: டில்லியின் ஷாதராவில் ஒரு அற்ப காரணத்திற்காக வாலிபர் தாக்கியதில் வியாபாரி ஒருவர் உயிரிழந்தார்.
மக்கி சராய் பகுதியின் நடைபாதையில் துணி வியாபாரம் செய்து வந்தவர் தயா ராம், 55. நேற்று முன்தினம் இவருடன் அதே பகுதியைச் சேர்ந்த ஷதாப், 23, என்பவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அப்போது கோபமடைந்து, தயா ராம் முகத்தில் ஷதாப் குத்தினார். இதில் மயக்கமடைந்து தயா ராம் கீழே விழுந்தார். மூச்சு, பேச்சின்றி கிடந்த அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் கூறிவிட்டனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து, ஷதாப்பை கைது செய்தனர்.

