ADDED : டிச 06, 2024 03:12 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடரில் பிரதமர் மோடி பங்கேற்க வேண்டும். அதானி குறித்து விசாரணையை கண்டு பயப்பட வேண்டாம் என எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கூறியுள்ளார்.
பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர் நவ., 25 ல் துவங்கி நடந்து வருகிறது. அதில், அதானி மீதான அமெரிக்காவின் குற்றச்சாட்டு தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும். பார்லிமென்ட் கூட்டுக்குழு விசாரிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. எம்.பி.,க்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ராகுல் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: பிரதமர் மோடி பார்லிமென்ட் வர வேண்டும். விசாரணையை கண்டு பயப்பட வேண்டாம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.