ADDED : மார் 14, 2024 12:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:டில்லி மெட்ரோ ரயிலின் நான்காம் கட்ட திட்டத்தில், இரண்டு புதிய வழித்தடங்களுக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.
இது குறித்து, மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்குர் கூறியதாவது:
புதுடில்லி லஜ்பத் நகர் முதல் சாகேத் ஜி -பிளாக் மற்றும் இந்தர்லோக் முதல் இந்திரபிரஸ்தா வரை --ஆகிய இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் பாதை அமைக்க, மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.
இந்த இரண்டு வழித்தடங்களிலும் 20.762 கி.மீ., துாரத்துக்கு ரயில் பாதை, நிலையங்கள் ஆகியவை அமைக்க மொத்த செலவு 8,399 கோடி ரூபாய் மதிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய அரசு, டில்லி அரசு மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்களிடமிருந்து பெறப்படும் கடன் ஆகியவற்றால் இந்த திட்டம் நிறைவேற்றப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

