ADDED : ஜன 03, 2024 11:24 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூரு : முதல்வர் தலைமையில் நாளை கர்நாடக அமைச்சரவை கூட்டம் நடக்கிறது.
அரசின் இணை செயலர் சந்திரசேகர் கூறியதாவது:
முதல்வர் சித்தராமையா தலைமையில், ஜனவரி 5ல் அமைச்சரவை கூட்டம் நடக்கும். இது, 2024ம் ஆண்டின், முதல் அமைச்சரவை கூட்டம் இதுவாகும். பெங்களூரின் விதான்சவுதாவின் மாநாடு ஹாலில் கூட்டம் நடக்கும்.
அமைச்சரவை கூட்டத்தில், அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் பங்கேற்பர். மாநிலத்தின் வளர்ச்சி பணிகள், திட்டங்களுக்கு நிதியுதவி வழங்குவது குறித்து ஆலோசனை நடக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.