கஞ்சாவை சட்டபூர்வமாக அங்கீகரிக்கனுமாம்: உளறிய சமாஜ்வாதி எம்.பி. மீது எப்.ஐ.ஆர்.,
கஞ்சாவை சட்டபூர்வமாக அங்கீகரிக்கனுமாம்: உளறிய சமாஜ்வாதி எம்.பி. மீது எப்.ஐ.ஆர்.,
UPDATED : செப் 30, 2024 09:57 AM
ADDED : செப் 29, 2024 11:58 PM

லக்னோ: கஞ்சாவை சட்டபூர்வமாக அங்கீகரிக்க வேண்டும் என உளறிய உ.பி., சமாஜ்வாதி கட்சி எம்.பி.க்கு கண்டனம் எழுந்ததையடுத்து மன்னிப்பு கோரினார்.
உ.பி. மாநில பிரதான எதிர்கட்சியான அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி காஸிப்பூர் தொகுதி எம்.பி.யாக இருப்பவர் அப்சல் அன்சாரி, சமீபத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், மாநிலத்தில் கஞ்சா புழக்கம் அதிகரித்து வருகிறது. எனது தொகுதியில் கூட ரயில் வாயிலாக கஞ்சா கடத்தல் நடக்கிறது.
இங்கு கும்பமேளா போன்ற பண்டிகைகளின் போது சாதுக்கள் பயன்படுத்துவதால், கஞ்சாவை சட்டபூர்மாக அங்கீகரிக்க வேண்டும் என கூறினார். எம்.பி.,யின் பேட்டிக்கு பல்வேறு கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இது குறித்து எம்.பி., கூறியது, தமது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா புழக்கம் தாரளமாக இப்பதாகவும், தடுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டியே தாம் பேட்டி அளித்ததாகவும், யாருடைய மனதை புண்படுத்தியிருந்தால், அதற்காக மன்னிப்பு கேட்பதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து காஸிப்பூரின் கோரா பஜார் போலீஸ் நிலையத்தில் அப்சல் அன்சாரி எம்.பி., மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து எப்.ஐ.ஆர், பதிவு செய்தனர்.

