ADDED : ஆக 15, 2024 07:56 PM
சிறையில் அடைக்கப்பட்டதால், அரவிந்த் கெஜ்ரிவாலால் தேசியக்கொடியை ஏற்ற முடியவில்லை. முதல்வர் இல்லத்தில் மூவர்ணக்கொடி ஏற்றப்படவில்லை. இது மிகவும் வருத்தமளிக்கிறது. இந்த சர்வாதிகாரத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரை சிறையில் அடைக்க முடியும். ஆனால் இதயத்தில் உள்ள தேசபக்தியை எப்படி நிறுத்த முடியும்?
- சுனிதா கெஜ்ரிவால்
முதல்வர் மனைவி
'எக்ஸ்' பதிவு
அரவிந்த் கெஜ்ரிவால் பொய்யால் சிறை வைக்கப்பட்டுள்ளார். இன்று சுதந்திர தினம், பிரிட்டிஷ் சர்வாதிகாரத்திலிருந்து 1947ல் இந்தியா சுதந்திரம் பெற்றது. இந்த சுதந்திரம் நமக்கு கிடைக்க நூற்றுக்கணக்கான சுதந்திரப் போராட்ட வீரர்கள் தடியடியை எதிர்கொண்டனர்; சிறைக்குச் சென்று தங்கள் உயிரைத் தியாகம் செய்தனர்.
சுதந்திர இந்தியாவில், தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் பொய் வழக்கில் சிக்கி பல மாதங்கள் சிறையில் அடைக்கப்படுவார் என்று அவர்கள் கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்கள்.
எங்கள் கடைசி மூச்சு வரை சர்வாதிகாரத்திற்கு எதிராக தொடர்ந்து போராடுவோம் என்று இந்த சுதந்திர தினத்தில் உறுதிமொழி எடுப்போம்.
- ஆதிஷி
டில்லி அமைச்சர்,
'எக்ஸ்' பதிவு

