தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/விஷத்தை கக்கலாமா?

விஷத்தை கக்கலாமா?

விஷத்தை கக்கலாமா?


ADDED : மே 27, 2024 02:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 27, 2024 02:04 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கங்கையில் புனித நீராடுவது, பிரதமரின் நம்பிக்கை சார்ந்தது. இதை கேள்வி கேட்பதாக நினைத்து, மல்லிகார்ஜுன கார்கே விஷம் கலந்த வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சிப்பது சரியல்ல. ஹிந்துக்களின் சக்தியை விரைவில் புரிந்து கொள்வீர்கள்.

பிரகலாத் ஜோஷி, மத்திய அமைச்சர், பா.ஜ.,

ஒப்புக் கொள்கிறாரா பிரதமர்?


தேர்தல் நடந்து முடிந்ததும், தேஜஸ்வி யாதவ் சிறைக்கு செல்வார் என பிரதமர் மோடி கூறுகிறார். இதன் வாயிலாக சி.பி.ஐ., போன்ற மத்திய விசாரணை அமைப்புகள் தன் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதை பிரதமரே ஒப்புக் கொண்டுள்ளார்.

கபில் சிபல், ராஜ்யசபா எம்.பி.,

பொய் சொல்லலாமா?


கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போது வேலை வாய்ப்பின்மை அதிகரித்து உள்ளது. ஆனால், பொருளாதார வளர்ச்சியில் நாடு முன்னோக்கி செல்வதாக மத்திய ஆட்சியாளர்கள் கூறுகின்றனர். ஆட்சியை தக்க வைப்பதற்காக பொய் சொல்கின்றனர்.

பிரியங்கா, பொதுச் செயலர், காங்கிரஸ்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us