sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

'சிறையில் இறப்பதே மேல்': 'ஜெட் ஏர்வேஸ்' நிறுவனர் கண்ணீர்

/

'சிறையில் இறப்பதே மேல்': 'ஜெட் ஏர்வேஸ்' நிறுவனர் கண்ணீர்

'சிறையில் இறப்பதே மேல்': 'ஜெட் ஏர்வேஸ்' நிறுவனர் கண்ணீர்

'சிறையில் இறப்பதே மேல்': 'ஜெட் ஏர்வேஸ்' நிறுவனர் கண்ணீர்

30


ADDED : ஜன 08, 2024 04:52 AM

Google News

ADDED : ஜன 08, 2024 04:52 AM

30


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மும்பை: கனரா வங்கிக்கு, 538 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்திய வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட, 'ஜெட் ஏர்வேஸ்' நிறுவனர் நரேஷ் கோயல், 74, மும்பை நீதிமன்றத்தில் ஆஜரான போது, கூப்பிய கரங்களுடன், ''நான் நம்பிக்கையை இழந்துவிட்டேன், தற்போதுள்ள நிலையில் நான் சிறையில் இறப்பதே மேல்,'' என, கண்ணீர் மல்க குறிப்பிட்டுள்ளார்.

நம் நாட்டில் முன்னணி நிறுவனமாக இருந்த, 'ஜெட் ஏர்வேஸ்' விமான சேவை நிறுவனம் தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்ததை அடுத்து, கடந்த 2019ல் விமான சேவையை முழுமையாக நிறுத்தியது.

சோதனை


இதற்கிடையே, வங்கியிலிருந்து கடன் பெற்று மோசடி செய்த வழக்குத் தொடர்பாக, அதன் நிறுவனர் நரேஷ் கோயல் மற்றும் அவரது மனைவியின் வீடு மற்றும் அலுவலகங்களில் சி.பி.ஐ., சோதனை நடத்தியது.

இதற்கிடையே, கனரா வங்கிக்கு, 538 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக நரேஷ் கோயல், அவரது மனைவி அனிதா மற்றும் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாகிகளுக்கு எதிராக சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்தது.

இது தொடர்பான பண மோசடி வழக்கில், கடந்த ஆண்டு செப்., 1ல் மும்பையில் நரேஷ் கோயலை அமலாக்கத் துறையினர் கைது செய்தனர். தற்போது அவர், நீதிமன்ற காவலில், மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பான வழக்கு விசாரணை மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், நரேஷ் கோயல் தரப்பில் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனு மீதான விசாரணைக்காக, சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.ஜி.தேஷ்பாண்டே முன் நேற்று முன்தினம் அவரை போலீசார் ஆஜர்படுத்தினர்.

அப்போது தன்னிடம் தனியாக விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என நீதிபதியிடம் அவர் கோரினார்.

இதற்கு நீதிபதி அனுமதி அளித்த நிலையில், நரேஷ் கோயல், கூப்பிய கரங்களுடன் மொத்த உடலும் நடுங்கியபடி, 'என் உடல்நலம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது' என, தெரிவித்தார்.

நீதிபதியிடம் அவர் தொடர்ந்து கூறியதாவது:


என் மனைவி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக உள்ளார். அவரை, உடல்நலம் பாதிக்கப்பட்ட என் ஒரே மகள் பராமரித்து வருகிறார். என் கால் முட்டியில் வீக்கம் உள்ளது. இதனால் மடக்க முடியாத அளவுக்கு வலி உள்ளது. சிறுநீர் கழிக்கும் போது வலி ஏற்படுகிறது, சில சமயங்களில் சிறுநீருடன் ரத்தம் வருகிறது.

என்னை மருத்துவமனையில் அனுமதிப்பதால் எந்த பயனும் இல்லை. மருத்துவமனைக்கு சென்றாலும், பல அசவுகரியங்களை சந்திக்க நேர்கிறது. இதனால், என் உடல்நலன் மிகவும் பாதிக்கப்படுகிறது.

நடவடிக்கை


தற்போதுள்ள சூழலில் நான் நம்பிக்கை இழந்து விட்டேன், உயிர் வாழ்வதை விட சிறையில் இறப்பதே மேல். என்னை மருத்துவமனைக்கு அனுப்பாமல் சிறையில் மரணிக்க அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

நரேஷ் கோயல் தெரிவித்த கருத்துக்களை பதிவு செய்த நீதிபதி, ''அவரது உடல்நலனை பாதுகாக்க தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும். அதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்'' என, அவரது வழக்கறிஞருக்கு உத்தரவிட்டார்.

இதற்கிடையே, நரேஷ் கோயலின் ஜாமின் மனுவுக்கு அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல் செய்துள்ளது, இவ்வழக்கு விசாரணையை வரும் 16ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்து உள்ளது.






      Dinamalar
      Follow us