ADDED : நவ 19, 2024 11:59 PM
பெங்களூரு; பெங்களூரு, ஜெயநகரை சேர்ந்தவர் சந்திரசேகர், 67. இவர் தனது வீட்டு தோட்டத்தில் 27 கிலோ கஞ்சா செடி வளர்த்ததாக, போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நீதிபதி எம்.நாகபிரசன்னா தலைமையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
குற்றஞ் சாட்டப்பட்ட சந்திரசேகர் தரப்பு வக்கீல் கூறுகையில், ''தோட்டத்தில் எப்படி கஞ்சா செடி வளர்ந்தது என்பது தெரியாது, தோட்டம் கவனிக்கப்படாததால், தானாகவே முளைத்திருக்கலாம். அதை உபயோகப்படுத்தவோ, விற்பனைக்காகவோ என் கட்சிக்காரர் வளர்க்கவில்லை,'' என்றார்.
இதை கேட்ட நீதிபதி, 'நீங்கள் என்ன, வனப்பகுதியிலா இருக்கிறீர்கள்; தானாக கஞ்சா செடி முளைப்பதற்கு. ஜெயநகரில் நகரின் மையப்பகுதியில் வசிக்கும் போது எப்படி தானாக இவ்வளவு செடி முளைக்கும். விற்பனை செய்ய வளர்க்கவில்லை என்றால், ஆசைக்காக வளர்த்தீர்களா' என கேள்வி எழுப்பினார். இந்த வழக்கு, டிச., 4ம் தேதி ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

