ADDED : அக் 19, 2024 12:28 AM

மஹாராஷ்டிராவில் மொத்தமுள்ள 288 சட்டசபை தொகுதிகளில் மஹா விகாஸ் அகாதி கூட்டணியினர் இடையே, 200 இடங்களுக்கு தொகுதிப் பங்கீட்டில் ஒருமித்த கருத்து ஏற்பட்டுஉள்ளது. மீதமுள்ள இடங்களில் காங்கிரஸ் முடிவெடுக்க முடியாமல் திணறுகிறது. நேரம் குறைவாக இருப்பதை அவர்கள் உணர வேண்டும்.
சஞ்சய் ராவத், ராஜ்யசபா எம்.பி., - சிவசேனா, உத்தவ் அணி
வெற்றி பிரதிபலிக்கும்!
ஹரியானா தேர்தல் முடிவுகள், கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி உள்ளன. மக்கள், பிரதமரின் பணியை அங்கீகரித்தது மட்டுமின்றி, மத்தியில் ஆட்சியில் உள்ள அரசே மாநிலத்திலும் இருக்க வேண்டும் என முடிவு செய்துள்ளனர். இதே வெற்றி மஹாராஷ்டிராவிலும் பிரதிபலிக்கும்.
ஏக்நாத் ஷிண்டே, மஹா., முதல்வர், சிவசேனா
மத்திய அரசால் சமாளிக்கிறோம்!
தெலுங்கு தேசம் மாநில கட்சியாக இருந்தாலும் தேசிய அரசியலில் எப்போதும் முக்கிய பங்காற்றியுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, 10.5 லட்சம் கோடி ரூபாய் கடனை விட்டுச் சென்றுள்ளார். மத்திய அரசின் உதவியால் சமாளிக்கிறோம். இல்லையென்றால் நிலைமை மோசமாகியிருக்கும்.
சந்திரபாபு நாயுடு, ஆந்திரா முதல்வர், தெலுங்கு தேசம்

