தலைநகரா ... '‛உலை''நகரா...': டில்லியை சுருள வைத்த 126 டிகிரி வெயில்
தலைநகரா ... '‛உலை''நகரா...': டில்லியை சுருள வைத்த 126 டிகிரி வெயில்
UPDATED : மே 29, 2024 06:04 PM
ADDED : மே 29, 2024 06:01 PM

புதுடில்லி: தலைநகர் டில்லியில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. முங்கேஷ்பூர் பகுதியில் பிற்பகல் 2:30 மணியளவில் 126.14 டிகிரி பாரன்ஹீட் பதிவானது. இந்தியாவில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை இது.
டில்லியில் வெயில் கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது. இதனால், மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். மக்கள் பாதிக்கப்படக்கூடும் என்பதால், டில்லிக்கு வானிலை மையம் 'ரெட் அலெர்ட் ' விடுத்து இருந்தது. முதியவர்கள் மற்றும் பாதிக்கப்படக்கூடும் மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் எனக்கூறியிருந்தது.
இந்நிலையில் டில்லியின் முங்கேஷ்புர் பகுதியில் 126.14 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இதற்கு முன்னர், அதிகபட்சமாக 2002 ம் ஆண்டு 120.56 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி இருந்தது. ஏற்கனவே குடிநீர் தட்டுப்பாட்டால் அவதிப்படும் டில்லி மக்களுக்கு இந்த வெயிலும் சேர்ந்து துயரத்தை அளித்துள்ளது.