டாக்டரை பலாத்காரம் செய்ததாக ஐ.பி.எஸ்., அதிகாரி மீது வழக்கு
டாக்டரை பலாத்காரம் செய்ததாக ஐ.பி.எஸ்., அதிகாரி மீது வழக்கு
ADDED : ஏப் 14, 2025 04:04 AM

நாக்பூர் : மஹாராஷ்டிராவில், திருமணம் செய்து கொள்வதாக கூறி, பெண் டாக்டரை பாலியல் பலாத்காரம் செய்ததாக, 30 வயது ஐ.பி.எஸ்., அதிகாரி மீது போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டுஉள்ளது.
மஹாராஷ்டிராவின் நாக்பூர் நகரில் வசிக்கும் பெண் டாக்டர், போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரில் கூறியுள்ளதாவது: நானும், அந்த ஐ.பி.எஸ்., அதிகாரியும் சமூக ஊடகத்தில், 2022 முதல் நண்பர்களாக இருந்து வந்தோம். முதலில் சமூக ஊடகங்கள் வழியே பேசிக் கொண்ட நாங்கள், பின், போனில் பேசி காதலித்து வந்தோம். ஐ.பி.எஸ்., தேர்வுக்கு அவர் தயாராகி வந்தார்; நான், எம்.பி.பி.எஸ்., படித்து வந்தேன்.
இந்நிலையில், திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்து, என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். ஐ.பி.எஸ்., அதிகாரியான பின், என்னை சந்திக்கவும், என் போன் அழைப்புகளை ஏற்கவும் மறுக்கிறார். அவரது குடும்பத்தினரும் என்னை ஏற்க மறுக்கின்றனர்.
எனவே, திருமணம் செய்து கொள்வதாக கூறி, பாலியல் பலாத்காரம் செய்த அந்த ஐ.பி.எஸ்., அதிகாரி மீது வழக்கு பதிவு செய்து, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த டாக்டர் கூறியுள்ளார்.
அதன்படி, அந்த ஐ.பி.எஸ்., அதிகாரி மீது நேற்று முன்தினம் பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரிக்கின்றனர். ஐ.பி.எஸ்., அதிகாரி மற்றும் புகார் கொடுத்த பெண் டாக்டர் பெயர் குறிப்பிடப்படவில்லை.