sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மற்றொரு படத்தை பாராட்டிய மேலாளர் மீது தாக்குதல் மலையாள நடிகர் மீது வழக்கு

/

மற்றொரு படத்தை பாராட்டிய மேலாளர் மீது தாக்குதல் மலையாள நடிகர் மீது வழக்கு

மற்றொரு படத்தை பாராட்டிய மேலாளர் மீது தாக்குதல் மலையாள நடிகர் மீது வழக்கு

மற்றொரு படத்தை பாராட்டிய மேலாளர் மீது தாக்குதல் மலையாள நடிகர் மீது வழக்கு


ADDED : மே 28, 2025 01:59 AM

Google News

ADDED : மே 28, 2025 01:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவனந்தபுரம்:மற்றொரு நடிகரின் திரைப்படத்தை பாராட்டியதற்காக தனது மேலாளரை தாக்கிய முன்னணி மலையாள நடிகர் உண்ணி முகுந்தன் மீது கொச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மலையாள திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் உண்ணி முகுந்தன். சமீபத்தில் அவர் நடித்து வெளியான மார்க்கோ படம் மலையாளம், ஹிந்தி, தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் சூப்பர் ஹிட் ஆனது. சீடன் என்ற திரைப்படம் மூலம் இவர் தமிழில் அறிமுகமானார். சமீபத்தில் வெளியான கருடன் படத்திலும் இவர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் இவரது மேலாளர் விபின் குமார், நேற்று கொச்சி போலீசில் அளித்த புகாரில் கூறியிருந்ததாவது:

நான் கடந்த 18 ஆண்டுகளாக சினிமாவில் உள்ளேன். 500-க்கும் மேற்பட்ட படங்களில் பணிபுரிந்துள்ளேன். நடிகர் உண்ணி முகுந்தனிடம் கடந்த ஆறு ஆண்டாக மேலாளராக பணியாற்றி வருகிறேன். அவர் சமீப காலமாக கடும் மன உளைச்சலில் உள்ளார். மார்க்கோ படத்திற்கு பிறகு எந்த படமும் சரியாக ஓடவில்லை. அவர் இயக்க தீர்மானித்திருந்த ஒரு படத்தில் இருந்து பிரபல தயாரிப்பு நிறுவனம் விலகிவிட்டது. புதிய படங்கள் எதுவும் அவருக்கு கிடைக்கவில்லை.

தாக்கினார்


இந்த காரணங்களால் ஏற்பட்ட ஆத்திரத்தை தன்னுடன் இருப்பவரிடம் தீர்த்துக் கொள்கிறார். நேற்று முன்தினம் கொச்சியில் உள்ள பிளாட்டுக்கு என்னை வரவழைத்து தாக்கினார். வேறொரு நடிகர் எனக்கு தந்த கூலிங் கிளாஸ் கண்ணாடியை காலில் போட்டு மிதித்து நொறுக்கினார். நரி வேட்டை படத்தை நான் இன்ஸ்டாகிராமில் பாராட்டியிருந்தேன். இதுதான் உண்ணி முகுந்தனின் ஆத்திரத்துக்கு காரணமாகும். எனவே என்னை தாக்கியதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

வழக்கு


இதைத்தொடர்ந்து உண்ணி முகுந்தன் தன் மீது கொச்சி இன்போ பார்க் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக மலையாள நடிகர்கள் சங்கம், தொழில்நுட்ப கலைஞர்கள் சங்கம் உள்ளிட்டவற்றிலும் விபின் குமார் புகார் அளித்துள்ளார்.






      Dinamalar
      Follow us